பிலியந்தலை – மாவித்தர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை இனந்தெரியாத நபரொருவர் அல்லது சிலரால் 54 வயதான குறித்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த பெண் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதோடு, அவரின் மகன் வெளிநாடு சென்றுள்ளார்.
குறித்த பெண்ணும் சுமார் ஒரு மாதம் அளவில் வெளிநாடு சென்றிருந்த நிலையில், நேற்று இரவே நாடு திம்பியுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.