மும்முரமாக நடந்த திருமண ஏற்பாடுகள்: நடுரோட்டில் வாந்தி எடுத்த மணமகன்..

தமிழகத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தது பிடிக்காததால், வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகன் ரியாத் அகமது (20).

இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளிலும் மும்முரமாக அவர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ரியாத் அகமது வி‌ஷம் குடித்த நிலையில் காரை ஓட்டிக் கொண்டு வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி பிரிவுக்குச் சென்றார்.

அங்கு 4 வழிச்சாலையில் காரை நிறுத்திய அவர் திடீரென வாந்தி எடுத்தார்.

இதனை கண்டு அந்த வழியாகச் சென்றவர்கள் அருகில் சென்று பார்த்த போது தான் ரியாத் அகமது வி‌ஷம் அருந்தி இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இரவு ரியாத் அகமது பரிதாபமாக இறந்தார்.

திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் அவர் தற்கொலை செய்திருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.