பிரித்தானிய இளவரசி மெர்க்கலின் கொள்ளுப்பாட்டி, வின்ட்சர் கோட்டையில் உள்ள அரச குடியிருப்பில் சமையல்காரியாக வேலை செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரி கடந்த மே மாதம் தன்னுடைய காதல் மனைவி மெர்க்கலை கரம் பிடித்தார்.
கர்ப்பிணியாக இருக்கும் மெர்க்கலிற்கும், அரச குடும்பத்திற்கும் பல வருடங்களுக்கு முன்னதாகவே ஒரு தொடர்பு இருந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு வெளிவந்த அரண்மனை ஊழியர்களின் தரவுத்தளங்கள் படி இந்த தகவல் கிடைத்துள்ளது.
மெர்க்கல் பாட்டியின் கெள்ளுப்பாட்டி 160 வருடங்களுக்கு முன்னர் வின்ட்சர் கோட்டையில் உள்ள அரச குடியிருப்பில் சமையல்காரியாக வேலை செய்தார் என 1856-ல் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருடைய பெயர் மேரி பார்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்திலும் இந்தியாவிலும் பணியாற்றிய ஒரு பிரித்தானிய இராணுவ அதிகாரி தோமஸ் பேர்ட் எனபவரை, மேரி திருமணம் செய்திருக்கிறார்.
ஆனால் இதற்கு அவருடைய குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மால்டாவிற்கு சென்றனர். அங்கு 1862-ம் ஆண்டு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு குழந்தையின் பெயர் மேரி.
பிரித்தானியா-இந்தியா வர்த்தக பேரரசின் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில், அவர்கள் 20 ஆண்டுகளாக மால்டாவில் கழித்தனர்.
அவரது கணவர் இறந்த பிறகு, மேரி தனது குடும்பத்துடன் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். பின்னர் இறுதியாக நியூ ஹாம்ப்ஷயரில் குடியேறினார் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.







