பிரித்தானியாவில் பல்வேறு கருத்து வேறுபாடுகளால் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் குடும்பத்தினர் தனித்தனியாக கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், ராணி எலிசபெத் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
பிரித்தானிய அரச குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாகவே பல்வேறு செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இளவரசிகள் கேட் மற்றும் மேகன் இடையே சரி வர ஒத்துப்போகாத காரணத்தால், ஒற்றுமையாக இருந்த இளவரசர்கள் வில்லியம் – ஹரி பிரிந்து செல்லும் கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தான் இளவரசர் ஹரி, தன்னுடைய கர்ப்பிணி மனைவி மெர்க்கலுடன் அரண்மனையில் இருந்து வெளியேறி ஃபிரோமோர் ஹவுஸிற்கு செல்கிறார் எனவும் பொதுமக்கள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.
இளவரசர் வில்லியம் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெர்க்ஷயரிலும், இளவரசர் ஹரி தன்னுடைய கர்ப்பிணி மனைவி மெர்க்கல் மற்றும் அவருடைய தாய் டோரியவுடன் சாண்ட்ரிகம் ஹவுஸிலும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இரண்டு ஜோடிகளும் பாரம்பரிய கொண்டாட்டங்களுக்காக நார்ஃபோக்கில் ராணியுடன் கிறிஸ்மஸ் நேரத்தை செலவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிறிஸ்துமஸ் பற்றி வெளியான அனைத்து தகவல்களும் வதந்தி எனவும், இரு குடும்பத்தாரும் சேர்ந்து நார்ஃபோக்கில் தான் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ளனர் எனவும் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.