பெற்றோர்கள் குழந்தைகளை நல்லமுறையில் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும், தெரியாத பல விடயங்களை தெரிந்து அறிவாளியாக வளர வேண்டும் என்றே நினைப்பார்கள்.
இதற்கு பள்ளிக்கு அனுப்புவது வழக்கம் தான்… மேலும் குழந்தைகள் பெற்றோரிடம் இருப்பதை ஆசிரியர்களிடம் இருக்கும் நேரமே அதிகம்.
அவ்வாறு இங்கு தனது ஒற்றை மகனை பறிகொடுத்த தாயின் கண்ணீருடன் கொடுத்த வாக்குமூலம் நம்மை கலங்க வைக்கிறது. குறைவான மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர் சத்தம் போட்ட காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.






