மைத்திரி – மஹிந்த பயணத்தை யாராலும் தடுக்க முடியாது….

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் உருவாகியுள்ள புதிய அரசாங்கத்தின் கீழேயே தொடர்ந்து நாட்டில் ஆட்சி நடைபெறுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹரகமயில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறுயுள்ளார்.

இவ்வாறு மைத்திரி- மஹிந்த இணைந்து ஆரம்பித்த இந்த அரசியல் பயணத்தை எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வெற்றிபெறச் செய்வோம் எனவும் அதனை யாராலும் தடுக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்யுமாறு நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை யாராலும் நிறுத்த முடியாதெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜனநாயகத்துக்காக ஆர்ப்பாட்டத்தை நடத்தும் ஐக்கிய தேசிய கட்சியினரே கடந்த காலத்தில் ஜனநாயகத்தை சீர்குழைத்தவர்கள் என்பதை எவரும் மறக்க கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.