நான் தான் உண்மையில் விக்கெட் எடுத்தேனா? கோஹ்லியின் வீடியோ

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, அவுஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, தான் எடுத்த விக்கெட்டையே நம்ப முடியாமல் சகவீரர்களிடம் சொல்லி சிரித்தார்.

இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் வரும் 6-ஆம் திகதி துவங்கவுள்ளது. இதற்கிடையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.

அந்த வகையில் அவுஸ்திரேலிய லெவன் அணியுடன் 4-நாட்கள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.

முதல் நாள் மழையால் ரத்துசெய்யப்பட்ட நிலையில், 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 358 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.

அடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலிய லெவென் அணி நேற்றைய 3-ஆம்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்கள் சேர்த்தது.

கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. நீல்சன், ஹார்டே களத்தில் இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து ஆடிய நீல்சன் சதமடித்தார்.

நீல்சனின் நீடித்த பேட்டிங் இந்திய வீரர்களுக்கு பிரச்சினையாகவே இருந்தது. அஸ்வின், உமேஷ் யாதவ், ரவிந்திர ஜடேஜா, இசாந்த் சர்மா எனப் பலரும் பந்துவீசியும் நீல்சன் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

ஆனால், திடீரென விராட் கோஹ்லி பந்துவீசி, நீல்சன் விக்கெட்டை வீழ்த்தினார். விராட் கோலி வீசிய பந்தை இடது கை ஆட்டக்காரரான நீல்சன் தூக்கி அடிக்க மிட் ஆன் திசையில் நின்றிருந்த உமேஷ் யாதவ் கையில் கேட்சாக மாறியது.

இன்றைய போட்டியில் செம பார்மில் இருந்த வீரரை நான் தான் அவுட்டாக்கினேனா? நம்பவே முடியவில்லை என்பது போல் மற்ற இந்திய வீரர்களிடம் சிரித்தார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.