சோகத்தில் மூழ்கிய காவலர்கள் – மக்களை கண்ணீரில் மிதக்க விட்ட ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்!

ஐ.ஜி பொன் மாணிக்கவேல் என்றாலே கண் முன் வந்து நிற்பது கோவிலுக்குள் நின்று கொண்டு சிலைகளை பற்றி விசாரித்து கொண்டிருக்கும் முகம் தான். அந்த அளவிற்கு தமிழக சரித்திரத்தில் இருந்து காணாமல் போன பல சிலைகளை மீட்டுகொண்டு வந்து மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.

இதில் பல அரசியல் தலைகள் மற்றும் முக்கிய புள்ளிகளின் தலை உருளும் என்பதால் திட்டமிட்டே அவரை வேறு துறைக்கு மாற்றும் முயற்சிகளும் நடந்தது. விசாரணைக்கு ஒத்துழைக்காத நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு திடுக்கிடும் தகவலை வெளியிட்ட போதும், நீதிமன்றம் சிறப்பு அனுமதி அளித்து அவரை சிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரணை நடத்த கோரியது.

அதில் வரலாற்று நிகழ்வாக தஞ்சாவூர் பெரிய கோயிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரு சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் அண்மையில் மீட்டு, கோயிலில் மீண்டும் ஒப்படைத்தனர்.

இதனை தஞ்சை மக்கள் ஒரு விழாவாக எடுத்து கொண்டாடி மகிழ்ந்து அவரை சிறப்பித்தனர். இப்படி பல அதிரடி நடவடிக்கைகள் மூலமாக தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கி வந்த ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில்,அவருக்கு ரயில்வே காவல்துறை சார்பில் பிரிவு உபசரிப்பு விழா நடத்தப்பட்டது.

ஐ.ஜி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில் நாளையுடன் இவரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

பணிக்கு சேர்ந்த இளம் அதிகாரிகளுக்கு இவ்வளவு காலம் முன் மாதிரிக விளங்கி வந்த ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பணியில் இருந்து ஓய்வு பெற இருப்பது, அதிகாரிகளுக்கு மட்டுமல்லாது தமிழக மக்களிடத்திலும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.