ஆண்களை பார்த்தாலே கதறி அழுவாள்! குரங்கின் நரக வாழ்க்கை

ஆசிய தீவுகளில் ஒன்றான போர்னியாவில் போனி எனும் ஓரங்குட்டான் குரங்கை வைத்து மேடம் என்ற பெண் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.

Kareng Pangi என்ற கிராமத்தில் நடைபெறும் இந்த பாலியல் தொழிலில், போனியுடன் நேரத்தை செலவிட ஆண்கள் அதிக பணத்தினை கொடுத்துள்ளனர்.

ஒன்றும் அறியாத போனி, ஆண்கள் வந்தால் திரும்பி நின்றுக் கொண்டு, தன்னை தானே அவர்களுக்காக ஒத்துழைத்து கொள்கிறது.

போனி மிகவும் ஈர்ப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக, அந்த மேடம், போனியின் உடல் சரும முடிகளை ஷேவிங் செய்வதை தனது அன்றாட வேலையாக செய்து வந்துள்ளார்.

இதனால் மேடத்திற்கு அதிக பணம் கிடைத்தது. ஆனால் போனிக்கு அதிக கொசு கடியின் தொல்லையால், சரும பிரச்சனைகள் மூலம் அவதிப்பட்டது.

போனி மற்ற மனித குரங்குகளை போல் மரத்தில் ஏறாது, கீழே தரையில் மட்டுமே படுத்துக் கொள்ளும்.

உராங்குட்டானுடன் ஒரு இரவு தங்குவதற்கு 3 டாலர் வசூலிக்கப்பட்டது. அந்தப் பெண், குட்டியை அடித்துத் துன்புறுத்தி வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தார்.

பல முறை காப்பாற்றப்பட்ட போனியை, காட்டுக்குள் அனுப்பும் முயற்சிகள் பத்து ஆண்டுகள் தோல்வியில் முடிந்தது. கடைசியில் 2013-ல் போனி காப்பற்றப்பட்ட நிகழ்வு ஆவணப்படமாக எடுக்கப்பட்டது.

அதை பார்த்த மேடம், என் குழந்தையை எடுத்து செல்கிறார்கள், இது நியாயம் அல்ல என கதறி அழும் காட்சிகள் பதிவாகியது.

அதன் அடிப்படையில், 2005-ல் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் 10,000 குழந்தைகள் மற்றும் பெண்கள் இந்தோனேசியாவில் பாலியல் அடிமைகளாக சிக்குகின்றனர். இவர்களில் மூன்றில் ஒருவர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓரங்குட்டானை தேடி ஆண்கள் வந்ததற்கு என்ன காரணம்?

உள்ளூர் பனை எண்ணெய் விவசாயிகள் மலிவான விலைக்கு பாலியல் உறவு கிடைத்தால் போதும் என்று ஆசைப்பட்டுள்ளனர்.

இதனால், விவசாயிகள் சிலர் ஓரங்குட்டான் குட்டியுடன் பாலியல் உறவு கொள்வதை வாடிக்கையாக வைத்துக்கொண்டனர்.

ஓரங்குட்டானைவிட உருவத்தில் இரண்டு மடங்கு எடை கொண்ட குண்டான முதியவர் ஒருவர் தினமும் குட்டியைத் தேடி பெண் வீட்டுக்கு வரத் தொடங்கினார்.

சிலர் புதிய அனுபவத்தைப் பெறவும் ஓரங்குட்டானைத் தேடி வந்தனர்.

இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது அந்த ஓரங்குட்டான் குட்டி எப்படியிருக்கிறது என்பது குறித்து சர்வைவல் பவுண்டேசன் அமைப்பின் இயக்குநர் மைக்கேல் ஊடகத்திடம் விவரித்துள்ளார்.

ஓர் இருட்டு அறையில் உடலில் ரனங்களுடன் அமர்ந்திருந்தாள். அவள் கால்களில் சங்கிலி கட்டப்பட்டிருந்தது. மிகவும் குட்டியாக இருந்தாள். இப்போது வளர்ந்துவிட்டாள். சில ஆண்டுகள் ஆண்களைப் பார்த்தாலே அலறி அழுவாள். பயத்துடன் பதுங்கிக் கொள்வாள்.

போனி, ஒவ்வொரு முறையும் அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதும் அலறி அழுது, மலம் கழித்துவிடுவாள். போனியை அவர்கள் அனைவரும் அவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக போனியின் பயத்தைப் போக்கினோம்.

15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது போனி ஆண்களைப் பார்த்தால் பயப்படுவது கிடையாது. சுதந்திரமாக காப்பகத்தின் மரங்களில் தாவி விளையாடுகிறாள்.

சிறுவயதில் போனி சந்தித்த அந்த வலிமிகு அனுபவம்தான் இந்தளவுக்கு வெளி உலகின்மீது பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று பேசியுள்ளார்.