இராணுவம் பொட்டு அம்மான் வீட்டில் இறுதியாக கைப்பற்றியவை???

இவர் வீட்டை இறுதியாக இராணுவம் கைப்பற்றிய போது அதிகமாக அங்கு கைப்பற்றப்பட்டது, கரும்புலிகளின் படங்கள் அடங்கிய ஆல்பங்கள்தானாம்..

அவ்வளவுக்கு அவர் சிந்தனை எப்பவும் கரும்புலிகள் மேல்தான் இருக்கும், இறுதிவரை கரும்புலிகளுடனேயே அவர் வாழ்க்கை அமைந்தது.

மக்களை உண்மையாக நேசித்த ஒரு வீரர், அதிகம் பேசாத குரல், ஆனால் அதிரடிதான் வாழ்க்கை…

தானாக விரும்பி அடம்பிடிச்சு புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டவர், எந்த சண்டைனாலும் அதில் அவருடைய நேரடி பங்களிப்பு இருக்குமளவுக்கு நடந்து கொள்பவர், முன்னேற்றங்களுக்கு மூளையாக செயற்பட்டவர்.

ஒரு செயலை எங்க எப்படி எந்தநேரத்தில யாரை வைத்து செய்யனும் என்ற திறமையே இவரின் கவனத்துடன் இருந்து புலிகள் அமைப்பை கட்டிகாத்தவர்.

அதிகமா உண்மையாக இருந்ததாலோ என்னவோ அமைப்பு உடைஞ்சப்ப அவரும் உடைந்து போய்விட்டார்…

உலக மனிதன் ஒருவன் தன் வாழ்க்கையை எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதை எப்படி அமைத்து கொள்ள வேண்டும் என்பதற்கு மிகசிறந்த உதாரணம்…