அந்தமான் தீவிற்கு நான் சென்றபோது நடந்தவை…பழங்குடியினர் என்ன செய்தார்கள்?

அந்தமானில் கொல்லப்பட்ட John Allen Chau என்னும் அமெரிக்க இளைஞரின் உடலை மீட்பது எப்படி என்பது குறித்து இந்தியாவைச் சேர்ந்த மானுடவியல் நிபுணரான T N Pandit ஆலோசனை வழங்கியுள்ளார்.

1966க்கும் 1991க்கும் இடையில் இந்தியா சார்பில் மானுடவியல் ஆய்வுக்காக அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சென்றவரான T N Pandit (83) அத்தீவுகளில் காலடி வைத்து அந்த தீவின் ஆதிவாசிகளிடம் தகவல் பரிமாற்றம் செய்த முதல் மானுடவியல் நிபுணராவார்.

வடக்கு செண்டினல் தீவில் தேங்காய் கிடைக்காது என்று கூறும் Pandit, அங்குள்ள ஆதிவாசிகளை சந்திக்க வேண்டுமானால் அவர்களுக்கு பரிசாக தேங்காய்களையும், அவர்களுக்கு அம்புகள் செய்வதற்கு உதவும் இரும்புத் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு செல்வதுடன், மிகவும் கவனத்துடன், அவர்கள் அம்பெய்தால் நம் மீது படாத அளவு பாதுகாப்பான தொலைவில் நின்று கொண்டு, அவர்களது கவனத்தை ஈர்க்க முயன்றால், கொல்லப்பட்டதாக கூறப்படும் அமெரிக்க இளைஞரின் உடலை மீட்டுக் கொண்டு வருவதற்கு அவர்கள் அனுமதிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்.

அத்துடன் மதியம் அல்லது மாலை நேரத்தில் அப்பகுதிக்கு ஒரு சிறு கூட்டமாக செல்ல வேண்டும் என்றும் அப்பகுதியில் வழக்கமாக மீன் பிடிக்கும் மீனவர்களின் உதவியையும் நாடலாம் என்கிறார்.

வடக்கு செண்டினல் தீவில் 80 முதல் 90 ஆதிவாசிகள் இருப்பார்கள் என்று கூறும் Pandit, அந்த ஆதிவாசிகள் வெறுப்புணர்ச்சியுடையவர்கள் என பலரும் கூறுகிறார்கள், ஆனால் அவர்களை அப்படிப் பார்ப்பது தவறு, ஏனென்றால் நாம்தான் அவர்களது எல்லைக்குள் நுழைய முயல்கிறோம் என்கிறார்.

நடந்தது துரதிர்ஷடமான நிகழ்வு என்றாலும், அந்த ஆதிவாசிகள் தங்களைக் காத்துக் கொள்ளத்தான் முயற்சி செய்கிறார்கள்.

நான் பத்திரிகைகளில் படித்தவரையில், அந்த அமெரிக்கர் முதலில் தீவுக்குள் செல்ல முயலும்போதே ஆதிவாசிகள் அவர் மீது அம்பெய்திருக்கிறார்கள், அப்போதே அவர் எச்சரிக்கையாகவும் சற்று பொறுமையாகவும் இருந்திருக்க வேண்டும்.

உள் விவகாரங்கள் துறை அலுவலகத்தின் கூற்றுப்படி, John Allen Chau தான் அங்கு செல்வது குறித்து உள்ளூர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கவும் இல்லை, வனத்துறையிடமோ, உள்ளூர் நிர்வாகத்திடமோ அனுமதி பெறவுமில்லை.

முதல் முறை ஆய்வுக்காக தனது கூட்டாளிகளுடன் Pandit அத்தீவுக்கு சென்றபோது, தேங்காய்களையும் இரும்புத்துண்டுகளையும் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அங்கு 18 குடிசைகளையும், வில் அம்புகள் மற்றும் ஈட்டிகளையும் கண்டிருக்கிறார். 1991ஆம் ஆண்டு மீண்டும் Pandit அங்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசிகள் அவர் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இடுப்பளவு நீரில் நிற்கும் Panditஇடமிருந்து ஆதிவாசி ஒருவர் தேங்காய்களைப் பெறும் புகைப்படங்களைக் காணலாம்.

வடக்கு செண்டினல் தீவினர் John Allen Chauவைக் கொன்றிருப்பார்களா என்று கேட்டபோது அதை நான் நம்ப விரும்பவில்லை.

ஆனால், அவர்கள் கொன்றிருக்க வாய்ப்பிருக்கிறது, ஏனெனில், நான் அங்கு சென்றிருந்தபோது ஒரு ஆதிவாசி இளைஞன் என்னுடைய மூக்குக் கண்ணாடியை எடுத்துக் கொண்டான்.

அவனிடமிருந்து அதை நான் திரும்பப் பெற முயன்றபோது, அவன் ஒரு கத்தியை உருவி அதைக் காட்டி என்னை பயமுறுத்தினான். உடனடியாக நான் சுதாரித்துக் கொண்டேன் என்கிறார் Pandit.

அந்த ஆதிவாசிகளைக் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை என்று கூறும் Pandit, அவர்களிடம் நாம் நெருங்குவது அவர்களுக்கு இதுவரை வராத நோய்களை அவர்களுக்கு நாம் கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அவர்களது கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையையும் பாதிக்கும் என்கிறார்.