இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை வேளை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மேலும் 6 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் கொழும்பின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளவத்தை பகுதியை பாமன்கடை, கிருலப்பனை உள்ளிட்ட பல பகுதிகளில் வீதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் மக்களின் குடிமனைகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மோசமான காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.






