பிரித்தானியாவை சேர்ந்த Heidi என்ற 45 வயது பெண்மணி தனது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
தனது 31 வயது காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ள இவர், தினமும் தொழுகை செய்து வருகிறார்.
இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி 9 குழந்தைகள் உள்ளனர். இரண்டு கணவன்களையும் விட்டு பிரிந்த பின்னர், தனியாக வசித்து வந்த இவர், பேஸ்புக் வாயிலாக Gambia வை சேர்ந்த 31 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவருடன் தொடர்ந்து பேசிய இவர், அதன்பின்னர் அவரை காதலிக்க தொடங்கியுள்ளார். இவரது காதலுக்கு , அந்த வாலிபரும் சம்மதம் தெரிவித்த நிலையில் இவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.
Salieu Jallow முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை திருமணம் செய்துகொள்வதற்காக Heidi முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளார்.
தனது காதலனின் குடும்பம் சிறிய பண்ணை வைத்து அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் பண உதவி செய்துள்ளேன்.
இரண்டு முறை அவரை சென்று சந்தித்துள்ளேன், விரைவில் எங்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது, அந்த நாளை எதிர்பார்த்து அல்லாவை பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன் என கூறுகிறார் Heidi.