ரத்த வெள்ளத்தில் கிடந்த வக்கீல் தம்பதி…

புதுச்சேரியில் வழக்கறிஞர் மற்றும் அவருடைய மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் 24 மணிநேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (72) பிரான்சில் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் தனது மனைவி ஹேமலதா (68) உடன் வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த அவருடைய நண்பர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ளும்பொழுது, வீட்டில் ஓட்டுநராக பணியாற்றிய காசிம் என்பவர் அவருடைய நண்பர் ஜலால் உடன் சேர்ந்து கொண்டு கொலை செய்திருப்பது தெரியவந்து.

24 மணி நேரத்தில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொள்கையில், பாலகிருஷ்ணன் வீட்டில் நகை மற்றும் பணத்திற்காக அவர்களை கொலை செய்துவிட்டு, களைப்பாகவும் கொஞ்சம் பதற்றமாகவும் இருந்ததால், அங்கேயே அமர்ந்து டீ போட்டு குடித்துவிட்டு கிளம்பியிருப்பது தெரியவந்தது.