தொடரும் கனமழை: சாயி மரணம்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குளிர் தாங்கமுடியாமல் விவசாயம் செய்யும் கூலித் தொழிலாளி மரணம் அடைந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சித்தாமூர் அடுத்த நீர்பெயர் ஊராட்சியில் வசித்து வருபவர் மயில்நாதன். இவர் விவசாய கூலி தொழில் செய்து வருகிறார். கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் மழையால் இவருடைய குடிசை வீடு முழுவதும் தண்ணீர் ஒழுகியபடி காணப்பட்டது. மழைத் தண்ணீரை அப்புறப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் பெய்த தொடர்மழையால் மயில்நாதன் குளிர் தாங்கமுடியாமல் கை கால் விரைத்துக்கொண்டு இன்று காலையில் படுக்கையில் மரணமடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட குளிரில் ஒருவர் இறந்து போனது குறிப்பிடத்தக்கது.