மொராக்கோ நாட்டில் இளம்பெண் ஒருவர் தம்மை ஏமாற்றிய காதலரை கொன்று துண்டு துண்டாக வெட்டி பாரம்பரிய அரிசி உணவாக சமைத்த சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.
மொராக்கோ நாட்டவரான பெயர் வெளிப்படுத்தாத குறித்த பெண்மணி காதலரின் உடலை துண்டு துண்டாக வெட்டி அதை பிரியாணியாக சமைத்து அப்பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த உணவை சாப்பிட்ட பெண்மணி ஒருவருக்கு மனித பல் ஒன்று தட்டுப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொல்லப்பட்ட இளைஞரின் சகோதரர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த பல்லை டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்திய பொலிசார், கொல்லப்பட்டது குறித்த பெண்ணின் காதலர் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அந்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். நீண்ட ஏழு ஆண்டுகள் காதலித்த பெண்ணை திடீரென்று அவர் கைவிட்டதால் ஏற்பட்ட ஆத்திரமே அவரை கொல்ல காரணமாக அமைந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால் குறித்த இளைஞர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.
கடந்த 13 ஆம் திகதி முதல் குறித்த இளைஞர் மாயமான நிலையில், அவரது சகோதரர் பொலிசாரை அணுகியுள்ளார்.
இதனியடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே மொராக்கோ நாட்டு பெண்மணி பிரியாணி சமைத்த சம்பவம் அம்பலமானது.






