பிக்பாஸ் சுஜா வருணியின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்….?

பிக்பாஸ் புகழ் சுஜா வருணி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் சிவாஜி தேவ் இருவருக்கும் நேற்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.

தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்த சுஜா , கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். அதன் பிறகே இவர் பிக் பாஸ் சுஜா என்றே அழைக்கப்படுகிறார்.

இவரும் சிவாஜி கணேசனின் பேரனான சிவாஜி தேவ் சுமார் 11 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் இணைந்து தங்களது திருமண தேதி சுஜாவின் பிறந்தநாள் அன்றே வெளியிட்டனர்.

தற்போது இவர்களது திருமண காணொளியும், வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.