கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கொத்தேகாலா கிராமத்தை சார்ந்தவர் நாகையா. இவரின் மகள் பெயர் இராஜேஸ்வரி (23). இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள குன்னிகேகாலா கிராமத்தைச் சார்ந்தவர் சோமண்ணா (வயது 28). இவர்கள் இருவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்., இவர்கள் இருவரும் குன்னிகேகாலா கிராமத்தில் வசித்து வந்தனர். சோமண்ணா கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருவதால் தினமும் பணிக்கு சென்று விடுவார்.
இந்நிலையில்., இராஜேஸ்வரிக்கும் அதே பகுதியை சார்ந்த வாலிபருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது., நாட்கள் கடந்த பின்னர் கள்ளக்காதலாக வளர்ந்தது. இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த விசயமானது இராஜேஸ்வரியின் கணவருக்கு தெரியவரவே., அவரை கண்டித்துள்ளார். இதனை கேட்காமலும் அவர் தனது கள்ளக்காதல் உறவை வளர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோமண்ணா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த இராஜேஸ்வரி குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாயாரின் வீட்டிற்க்கு சென்றுவிட்டார்.
இராஜேஸ்வரி அவரின் தயார் வீட்டிற்க்கு சென்றும் கள்ளக்காதலை மறக்க இயலாமல்., தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனை அறிந்த அவரின் பெற்றோரும் அவருக்கு அறிவுரை வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில்., மீண்டும் தனது மனைவியுடன் வாழவேண்டும் என்ற ஆசையில் அவ்வப்போது இராஜேஸ்வரியின் இல்லத்திற்கு வந்து அவரிடம் பேச முயற்சித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில்., இராஜேஸ்வரியின் பெற்றோர்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனை கேட்டு கடும் மனஉளைச்சலில் இருந்த இராஜேஸ்வரி., வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, இராஜேஸ்வரியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இந்த விசயம் குறித்து., இராஜேஸ்வரியின் பெற்றோருக்கும் கணவருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்க்கு விரைந்த அவர்கள் கண்ணீரில் மிதந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கள்ளகாதலால் தனது வாழ்க்கை அளிக்கப்பட்டது என்று அவர் தற்கொலை செய்தாரா? அல்லது விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கேள்விகளுடன் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்காதலை மையப்படுத்தி தனது கணவனை இழந்து., குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.






