தொழில்நுட்பத்தைப் தவறாக பயன்படுத்திய சைக்கோ!

தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட நபரொருவர் வசமாக சிக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தெரியவருவது:

ராமநாதபுரம் அருகே உள்ள தாமரைக்குளம் என்ற பகுதியை சேர்ந்தவன் தினேஷ் குமார் இவன் எம்.சி.ஏ வரை படித்துள்ளான். ஆனால் இவன் படிப்புக்கு தகுந்த வேலைக்கு செல்லாமல் ராமாநாதபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் லேப்டெக்னீசியனாக பணியாற்றி வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த கல்லூரியில் பணியாற்றிய பெண்கள் மற்றும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் வேலையை இழந்தான் தினேஷ்குமார். பின்பு அவன் கற்றுக் கொண்ட சில தொழில்நுட்பங்கள் மூலம் பெண்களை பாலியல்விருப்பத்திற்கு இணங்க வைக்க முடிவு செய்துள்ளான்.

குறிப்பாக தினேஷ்குமார டிராக் வியூ என்று செயலியைப் பயன்படுத்தி அவனுக்கு தெரிந்த பெண்கள் மற்றும் உறவுக்கார பெண்களின் செல்போனில் அவர்களுக்கு தெரியாமலே தரவிறக்கம் செய்து, அதை தனது செல்போன் மூலம் கட்டுப்படுத்தியுள்ளான்.அதன்பின்பு பெண்களின் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட டிராக் வியூ செயலியை தனது செல்போன் மூலம் இயக்கி, பெண்களின் செல்போன் கமரா பதிவு செய்யும் காட்சிகளை அவனது செல்போனில் கண்காணித்துள்ளான் என்று கூறப்படுகிறது.

தினேஷ்குமார் அவனது செல்போனில் இருந்து பெண்கள் தனியாக அரைகுறை ஆடையுடன் இருப்பதையோ, அல்லது தங்களது கணவருடன் பாலூறவு கொள்ளும் காட்சிகளையும் கண்காணித்துப் பதிவு செய்துள்ளான். பின்பு இந்த டிராக் வியூ செயலியை பயன்படுத்தி எடுத்த வீடியோக்களை கொண்டு பெண்களை மிரட்டி பாலியல் விருப்பத்திற்கு இணங்க நிர்பந்தித்து அவர்களது வாழ்வை சீரழித்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவன் எடுத்த வீடியோக்களை இணையத்தில் பரவ விட்டு விடுவதாக மிரட்டியதால் பெண்கள் யாரும் இவன் மீது புகார் கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தினேஷ் அவனது உறவுக்கார பெண் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளான்,அங்கு வெளிநாட்டில் வேலைபார்க்கும் கணவர் அனுப்பி வைத்த ஸ்மார்ட்போனை கொடுத்த அந்த பெண் வட்ஸ்ஆப் போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய கேட்டுள்ளார், வழக்கம்போல் டிராக் வியூ செயலியை பதிவிறக்கம் செய்து அந்த பெண் கணவருடன் பேசும் அனைத்து விவகாரங்களையும் தன்னுடைய லேப்டாப்பில் பதிவு செய்துள்ளான்.

மேலும் ,அந்த பெண் கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளான். அதை வைத்து தான் யார் என்று தெரிவிக்காமல் அந்த பெண்ணை மிரட்டி ஆசைக்கும் இணைக்கும் படி வற்புறுத்தி உள்ளான். மேலும், செய்வதறியாமல் தவித்த அந்த பெண் இந்த விவகாரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். பின்பு சகோதரி அனுப்பவது போல, ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிகாட்டி அங்கு வந்தால் தனிமையில் சந்திக்கலாம் என்று கூறி தினேஷ்குமார் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளார்.

அதைநம்பி வந்த தினேஷ் அங்குவந்துள்ளான். அவனை பார்த்ததும் அந்த பெண்ணின் சகோதரரும் உறவினர்களும் அதிர்சி அடைந்தனர். தினேஷ்குமார் உறவு முறையில் அந்த பெண்ணிற்கு தம்பி என்பது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.

பின்பு தினேஷ்குமாரிடம் விசாரித்த போது அந்த செயலி மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை திருடிவைத்து கொண்டு மிரட்டும் சைக்கோ எக்று தெரியவந்தது. பின்பு தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் அவனை ஒப்படைத்தனர். தினேஷ்குமார் வீட்டுக்கு சென்று காவல்துறையினர் சோதனையிட்ட போது சுமார் 100 பெண்களின் அந்தரங்க வீடியோக்கள், மற்றும் லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

இதில் மிக கொடுமை என்னவென்றால், தினேஷ் தனது உடன் பிறந்த சகோதரியின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்திருந்தது தான். மேலும், பத்து பெண்களின் ஆடைகளும் அங்கு இருந்தது. அது தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட பெண்களின் நினைவாக வீட்டில் வைத்திருப்பதாக சைக்கோ தினேஷ்குமார் கூறியுள்ளான்.