வேரோடு சூறையாடிய கஜா, கண்ணீர் சிந்தவைக்கும் வீடியோவை வெளியிட்ட பிரபல இயக்குனர்.!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 11 ஆம் தேதி புயலாக மாறியது. கஜா என பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த 5 நாட்களாக தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வந்த நிலையில் இன்று அதிவேகமான காற்று மற்றும் மழையோடு கரையை கடந்தது.

இந்நிலையில் 111 கி.மீ வேகத்தில் வந்த கஜா புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற பல உள் மாவட்டங்களிலும் தனது கோரத்தாண்டவ ஆட்டத்தை காட்டியது.மேலும் இதனால் ஏராளமான மின்கம்பங்கள் சேதடைந்து விழுந்துள்ளது . மரங்கள் அடியோடு சாய்ந்து பல வீடுகள் சேதமடைந்துள்ளது. மேலும் கஜா புயலால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் சரவணன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், தோப்பில் இருந்த 1200 மரங்களில் 800 தென்னை போச்சு…” எனக் கதறுகிறான் கட்டயங்காடு கிராமத்தை சேர்ந்த என் நண்பன் அன்பு. 40, 50 வருட தென்னை மரங்களையும் முறித்துப் போட்டுவிட்டது காற்று. பெற்ற பிள்ளைகளை இழந்தது போல் தென்னையை இழந்து கதறுகின்றனர் டெல்டா மாவட்ட விவசாயிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை கண்ட அனைவரும் மிகுந்த மனவருத்தத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.