காதல் ஜோடியை ஏற்று கொள்ள மறுத்த பெற்றோர்! காதலர்கள் எடுத்த துணிச்சல் முடிவு!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் கவுதமி (வயது 22). இவர் பி.எஸ்.சி. பட்டதாரி. அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வடமதுரை அருகே ஆர்.கோம்பையைச் சேர்ந்தவர் மோகன் (வயது 22), காங்கேயம் பகுதியில் வேலைக்கு சென்றார்.

அப்போது கவுதமியுடன், மோகனுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.

இந்த காதல் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரியவந்து. கடும் எதிர்ப்பு கிளம்பியது. தங்களை பிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் இருந்த காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடினர். பின்பு கரூர் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். காவல் துறையினர் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து சமரசம் பேசினர். ஆனால் இருவரும் காதல் ஜோடியை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். மோகன், தனது காதல் மனைவி கவுதமியை தானே காப்பாற்றிக் கொள்வேன் எனக் கூறி இருவரும் தனியாக சென்று விட்டனர்.