திமுகவில் புறக்கணிக்கப்படுவது அம்பலம்! சகோதரர்கள் எடுத்த முடிவு?!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் அவரை சந்தித்தார்.

மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள கட்சி தலைவர்கள் ஒன்றாக இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரிஸ்டாலின் வீட்டுக்கு இன்று நேரில் சென்றார். அப்போது அவரை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். அப்போது, திமுக எம்.பி கனிமொழி, திருச்சி சிவா, டி.ஆர்.பாலு, ஆ ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சந்திப்பு முடிந்த பிறகு யெச்சூரி கூறுகையில், தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். பொதுவாக திமுக டெல்லி விவகாரங்களை மாறன் குடும்பமே கவனித்து வந்தது. கனிமொழி வருகைக்கு பின்னர் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், தயாநிதி மாறனை புறக்கணிக்காமல் இருந்தார்கள்.

ஆனால் அன்மை காலமாக திமுக டெல்லி விவகாரங்களில் மாறன் இல்லாமலே திமுக செயல்பட்டு வருகிறது. இது திமுகவில் அவர்கள் புறக்கணிக்கப்படுவதன் தொடக்கம் என கூறப்பட்டு வருகிறது. அண்மையில் வெளியான சன் குழுமத்தின் சர்க்கார் படம் பொதுவாக அதிமுகவிற்கு எதிரானது கூறப்பட்டு வந்த நிலையில் அது திமுகவிற்கு எதிரான படம் என சமூக வலைத்தளங்களில் எழுதப்பட்டு வருவதும் கவனம் பெற்று வருகிறது. இதனால் திமுகவில் ஒரு அதிருப்தி இருப்பதாக தெரிகிறது.