ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் கீழ் அதிகாரமளிக்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் விசாரணையின் போது அவர் உயர்நீதிமன்றத்தில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
இதையடுக்கு குறித்த வழக்கு விசாரணைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியானதே என்ற அடிப்படையிலான வாதங்களை சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உச்ச நீதிமன்றில் முன்வைக்க உள்ளார் என முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு; அனைத்து மனுக்களையும் இரத்துச்செய்யுமாறு சட்டமா அதிபர் நீதிமன்றிடம் கோரிக்கை
பாராளுமன்றை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குண்டு ; அனைத்து மனுக்களையும் இரத்துச் செய்க – நீதிமன்றிடம் சட்டமா அதிபர் கோரிக்கை.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம், அரசியலமைப்புக்குட்பட்டதெனத் தெரிவித்துள்ள சட்டமா அதிபர் அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தின் படியே பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார்.
அரசியலமைப்பின் 19 வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது எனவும் சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானதல்ல என்றும் பாராளுமன்றம் கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இரத்துச்செய்யுமாறு சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






