தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத்.
அதை தொடர்ந்து 4 ஸ்டுடென்ட்ஸ், காதல், வெயில்,எம்டன் மகன்[ போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்தார் மேலும் .மிக குறுகிய காலத்திலேயே வெற்றி தோல்வி என இரண்டையும் பார்த்துவிட்டார்.
மேலும் ஆடல் துறையில் சிறந்து விளங்கும் பரத் தற்போது பொட்டு, சிம்பா, காளிதாஸ் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்
இவர் கடந்த 2013 இல் துபாயில் வளர்ந்த மலையாளி டென்டிஸ்ட் பெண்ணான ஜெஷ்லி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருந்தன.
இந்நிலையில் தற்போது முதன் முதலாக அந்த குழந்தைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தீபாவளி கொண்டாட்டத்தில் குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் லைக் செய்துள்ளர்.






