நடிகர் விஜய் குறித்து சர்கார் பட வில்லன் உடைத்த இரகசியம்.!

சர்கார் படத்தில் வில்லனாக நடித்தவர் உண்மையிலேயே அரசியல்வாதியாக இருக்கும் பழ.கருப்பையா தான்.

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கும் அவர் சர்கார் படத்தில் வில்லன் வேடம் பூண்டு நடித்துள்ளார்.

இதில் நடிகர் விஜயிடம் அவருடன் நடித்தது மூலமாக சில விஷயங்களை அறிந்து கொண்டு, அதனை தற்போது பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அமைச்சர்கள் சொல்வதை போல படத்தில் உள்ள சர்ச்சையான காட்சிகளை நீக்க முடியாது.

படம் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வெளியாகி உள்ளது. இது ஒரு கட்சியை மட்டுமே எதிர்க்கும் படமில்லை.

அதிமுக மட்டுமல்லாது, திமுக தொடர்பாக இடம்பெற்ற சில வசனங்கள் தணிக்கை குழுவினரால் ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டது.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி கிண்டல் செய்யும் வகையில் ஒரு சில வசனங்கள் இருந்தது. அதனை தணிக்கை குழுவினர் புரிந்து கொண்டு நீக்கி விட்டனர்.

அமைச்சர்கள் சொல்வதால் காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இது நிகழ்கால அரசியலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.

அமைச்சர்கள் எதிர்க்கிறார்கள் என்றால், அவர்கள் மீது குற்றம் இருக்கிறது என்று அர்த்தம். இதனால் படம் மென்மேலும் பெருவெற்றி பெறுமே தவிர ஒரு போதும் பின்வாங்காது.

இலவசங்கள் அன்றைய தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும். பிரச்சனைகளுக்கு அது நிரந்தர தீர்வாகாது.

அரசிடம் நல்ல திட்டங்கள் இல்லை. விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அவரிடம் பேசிய பொழுது, அவர் பேச்சிலேயே அந்த திட்டம் வெளிப்பட்டது.

ஆனால் எப்போது அரசியலுக்கு வருவார் என்று தெரியாது’ என கூறியுள்ளார் சர்கார் பட வில்லன் பழ.கருப்பையா.