கொழும்பு கிரேன்பாஸ் பிரதேசத்தில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் தற்போதைய நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
உந்துருளியில் வந்த நபரொருவர் சிற்றூர்ந்தில் பயணித்தவர் மீது இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கிரேன்பாஸ் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.