மனைவியின் தவறான தொடர்பு… தற்கொலை செய்துகொண்ட மகள்: கொலை குறித்து கணவரின் வாக்குமூலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தனது மனைவியின் தவறான தொடர்பான தனது மகள் தற்கொலை செய்துகொண்டதால் மனம் உடைந்த கணவர், அதற்கு காரணமான நபரை கொலை செய்துள்ளார்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி துரைராஜ்(வயது 59). ஓய்வு பெற்ற ஆசிரியர்.

இவரை, மத்திய ரிசர்வ் பொலிசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பிரான்சிஸ்(52) என்பவர் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனிடையே புதூர் பாண்டியாபுரம் பகுதியில் பதுங்கி இருந்த பிரான்சிசை தனிப்படை பொலிசார் கைது செய்தனர்.

கைதான பிரான்சிஸ் பொலிசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

நான் மத்திய ரிசர்வ் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தேன். எனது மனைவி தனியார் பள்ளியில் வேலை செய்து வந்தார். அவருடன் வேலை செய்த அந்தோணிதுரைராஜூக்கும் எனது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த நான் அவர்களை கண்டித்தேன். இந்த நிலையில் எனது மகளுக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்தோம். எனது மனைவியின் கள்ளத்தொடர்பு காரணமாக மகளின் திருமணம் தள்ளிப் போனது.

இதனால் வேதனையில் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள். இதனால் நான் எனது வேலையில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று ஊருக்கு வந்தேன். என் வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்சினைக்கெல்லாம் காரணம் அந்தோணிதுரைராஜ் என்பதால் அவர்மீது ஆத்திரத்தில் இருந்தேன்.

இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதற்கான தருணத்தை எதிர்பார்த்து வெட்டி கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.