மெரினா கடற்கரை இரவு நேரங்களில் திறந்தவெளி பாராகவும், விபசார விடுதி போலவும் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மெரினா கடற்கரையில் சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அலை மோதும். நேற்று முன்தினமும் சனிக்கிழமை இரவு மெரினாவில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. காவல் துறையினரும் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதுபோன்ற ஒரு சூழலில் தான் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தார்.
மெரினாவில் போதுமான காவல் கண்காணிப்பு இல்லாததால் அங்கு சமூக விரோத செயல்கள் அதிகம் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சட்டி வருகின்றனர்.
குடிகாரர்கள் பலர் கடற்கரை மணலில் அமர்ந்து மது குடிப்பதுடன், விபசார அழகிகளை அழைத்துச் சென்று உல்லாசமாக இருப்பதும் தெரியவந்தது. குறிப்பாக இருள் சூழந்த பகுதிகளில், பொதுமக்களின் நடமாட்டம் இருக்கும்போதே ஜோடியாக வரும் பலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
மெரினா கடற்கரையையொட்டிய வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காலியாக உள்ள வீடுகளில் விபசாரம் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை காவல் துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்தி, சமூக விரோத செயல்களை காவல் துறையினர் தடுக்க வேண்டும். இதுபோன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






