அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த என்னை மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்தார்கள் என பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் பாரெய்லி என்ற பகுதியில் உள்ள ஒரு இளம் பெண் இரண்டு தினங்களுக்கு முன்பு தங்கள் தோட்டத்தில் வேலை செய்துள்ளார்.
அப்போது அவரைப் பாம்பு கடித்துள்ளது. இதனால் அவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அந்தப் பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்து அப்பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், நேற்று இரவு அவசர சிகிச்சை பிரிவில் என்னைத் தவிர மற்ற நோயாளிகள் யாரும் இல்லை. அப்போது திடீரென மருத்துவமனை ஊழியர்கள் நான்கு பேர் உள்ளே நுழைந்தனர்.
பிறகு எனக்கு வலுக்கட்டாயமாக ஊசி போட்டு என்னை வன்கொடுமை செய்தனர் என கூறியுள்ளார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.






