குடியை மறப்போம் , குடும்பத்தை காப்போம்!

குடியை மறப்போம் , குடும்பத்தை காப்போம், என ஆனந்தமாக தீபாவளி கொண்டாட ஆதரவற்றவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெற்ற பிள்ளைகளால் ஆதரவின்றி விடப்பட்டவர்களும், உறவினர்கள் இல்லாமல் வயது முதிர்வின் காரணமாக சாலையில் வசிப்பபவர்களை அரவணைத்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது ஈர்நெஞ்சம் அறக்கட்டளை.

கோவை ஈர நெஞ்சம் அறக்கட்டளை சார்பாக தீபாவளியை முன்னிட்டு தினக்கூலி வேலை செய்பவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் குடியை மறக்க வேண்டி ஈர நெஞ்சம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றவர்கள் ஆதரவளிக்ககோரி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது கடின உழைப்பின் அங்கீகாரமாக ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் போனஸ் பணம் மகிழ்ச்சியாக குடுமப்பத்துடன் கொண்டாடவே அது குடிக்க அல்ல என்பதை வலியுறுத்தி ஆதரவற்ற முதியவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் உலகில் பெரும்பான்மையான குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவதற்கு பெற்றோர்களின் குடிப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. நாளை உங்களது குழந்தைக்கும் இதே நிலை ஏற்படாமல் இருக்க குடியை மறப்போம், குடும்பத்தை காப்போம் ,என் குடும்பம், என் பண்டிகை என்ற தலைப்பில் அடித்தட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தீபாவளி பண்டிகையை ஆதரவற்றவர்களிடம் வலியுறுத்தினர்.