மத்திய கிழக்கு நாடொன்றில் இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன்.
குறித்த இலங்கையர், தனது அடுக்கு மாடி குடியிறுப்பின் ஒன்பதாவது மாடியிலிருந்து குதித்து நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள ஹவாலி நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது மனைவியுடன் ஏற்பட்ட மோதலை அடுத்தே குறித்த நபர் தற்காலை செய்துகொண்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு இலக்கான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






