தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு திடீர் ஆபத்து.!

சென்னை வானிலை ஆராய்ச்சிமையம் இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் இதனால் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், 8-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது இலங்கை, குமரி கடல் பகுதி வழியே கரையை கடக்க உள்ளதாகவும், இதனால், 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் அதிக சீற்றத்துடனும், 7 மற்றும் 8-ம் தேதிகளில் குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சீற்றம் காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீன்வர்கள் 6-ம் தேதிக்குள் கரை திரும்பும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால், கனமழை பெய்யுமா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாலச்சந்திரன், தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.