குவைத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hawally நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.
நேற்று தம்பதி இடையே திடீரென சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
பின்னர் வீட்டின் ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து அருகில் வசிப்பவர்கள் கூறுகையில், சம்பவம் நடந்த நேரத்தில் தம்பதிகள் கத்தி கொண்டு சண்டை இருந்தார்கள்.
திடீரென அவர்கள் சத்தம் நின்றதால் சண்டையை நிறுத்திவிட்டார்கள் என நினைத்தோம்.
ஆனால் மாடியிலிருந்து அந்த நபரின் உடல் கீழே விழும் சத்தம் கேட்டது என கூறியுள்ளனர்.
இதனிடையில் கத்திக்குத்து பட்ட மனைவி ஆபத்தான நிலையில் முபாரக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






