கூட்டமைப்பின் எம்.பி கட்டுநாயக்காவில் மாயம்!

கடனாவில் இருந்து இலங்கைக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கட்டுநாயக்கா வந்த பின்னர் தொடர்புகள் துண்டிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவருடைய கட்சி உறுப்பினர்களும், கட்சித்தலைவர்களும் பல முறை இவருடைய தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகளை எடுத்த போதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

எனினும் குறித்த முக்கியஸ்தர் இன்று அல்லது நாளை புதிய அரசாங்கத்தில் பிரதி அமைச்சுப்பதவி கிழக்கு அபிவிருத்தி அமைச்சைப் பெற வாய்ப்புக்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெளிப்படையாக விமர்சித்து வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

அத்துடன்,அவரது கட்சித் தலைவரான சித்தார்த்தன் அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பின் தலைவரால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கப் பட்டதுடன் ரணிலிடம் அமைச்சுப் பதவி கேட்டு சென்று திருப்பி அனுப்பப் பட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.