பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க நடிகை பாப்ரி கோஷ் நியூ ஐடியா!

சினிமா துறையில் நடிகைகள் பலர் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது, பாலியல் தொல்லை பற்றி புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த குற்றங்களில் இருந்து தப்பிக்க நடிகை பாப்ரி கோஷ் யோசனை ஒன்றை கூறியுள்ளார்.

சன் தொலைக்காட்சியில், மிகப் பிரபல டிவி தொடரான, நாயகியில் கண்மணி எனும் கதாப்பதிரத்தில் நடத்து வருபவர் பாப்ரி கோஷ். இவர் அளித்த பேட்டி ஒன்றில் மீ டூ பற்றியும், சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் பதிலளித்துள்ளார்.

என் அனுபவத்தில், இதுவரை பாலியல் தொல்லை நான் சந்தித்ததில்லை. நான் நடித்து வரும் நாயகி தொடரின் குழுவில் நான் பாதுகாப்பாகவே உணர்கிறேன். பாலியல் தொல்லை குறித்து உங்களுக்கு பாதிப்பு இல்லையென்றால் மட்டும் பேசுங்கள். இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்தால் அவர்களுக்கு ஒரே ஒரு முத்தம் கொடுங்கள் போதும். அதாவது அவர்களது மனைவி, குழந்தையின் முன்பு, மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறினார்.