மோடியின் மேலாடையை பார்த்து வியந்த அதிபர்.!!

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி., கைகள் இல்லாத மேல் ஆடைகள் (கோட்டுகள்) அணிவதை பழக்கமாக கொண்டவர். இந்த வகை மேலாடைகள் அனைத்தும் “மோடி ஜாக்கெட்” என்று அழைக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இந்தியாவிற்கு வந்திருந்தார். அப்போது பிரதமர் மோடி அணிந்திருக்கும் ஜாக்கெட்டானது அவருக்கு கம்பீரமான தோற்றத்தையும்., அழகாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை நிலையில் கொண்ட பிரதமர் மோடி அதே போன்ற 4 மேலாடைகளை தயார் செய்து தென்கொரிய அதிபருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த ஜாக்கெட்டுகளை புகைப்படம் எடுத்தும்., அணிந்தும் மகிழ்ச்சியாக இருப்பதை ட்விட்டரில் புகைப்படமாக பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடிக்கு கிடைத்த உலக அமைதிக்கான விருதையும் பாராட்டி தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.