விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சார்ந்தவர் நிர்மலாதேவி. இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர் மாணவிகளின் சூழ்நிலையை காரணம்காட்டி பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ஆளுநர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பெயர் அடிபட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கு புலனாய்த்துறையினருக்கு மாற்றப்பட்டு பின்னர் நிர்மலாதேவியை கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின் படி அந்த கல்லூரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நிர்மலா தேவிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.
தற்போது சிபிசிஐடி காவல்துறையிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் அவர் அளித்துள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதில், மார்ச் 12ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி என்னை தொலைப்பேசியில் அழைத்து தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார்.
உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.
அங்கிருந்து புறப்பட்டபோது என் அருகில் வந்த கருப்ப சாமி நானும் உங்களுடன் காரில் வருகிறேன் என்று கூறினார்.
இருவரும் இணைந்து கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் கிளம்பினோம்.
போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, காரில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம்.
அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் கருப்பசாமி என்னிடம் மாணவிகள் விவகாரம் குறித்து பேசினார்.
இன்னும் சில நாட்களில் சென்னை கிளம்ப உள்ளேன் கல்லூரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா? என்று கேட்டார்.
நானும், முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும், தொடர்ந்து அவர் இதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார்.
அதன்பிறகு, அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நிர்மலாதேவியுடம் மேலும் பத்து பேர் தொடர்பில் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஆறு மாதங்களுக்கு பிறகு நிர்மலா தேவியின் இந்த வாக்கு மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ள நிலையில், கருப்பசாமி இதனை மறுத்துள்ளார்.
ஊடகங்களில் வெளியாகும் வாக்கு மூலம் உண்மை இல்லை. நிர்மலா தேவி வாக்கு மூலம் அனைத்தும் பொய்.
எனக்கும், என் குடும்பத்துக்கும் உடனடியாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மூளைச்சலவை செய்யப்பட நிர்மலாதேவி ஒன்றும் குழந்தை இல்லை. 50 வயதாகும் அவருக்கு நல்லது கெட்டது தெரியாதா..? என்று கூறியுள்ளார்.
மேலும், தங்கள் வழக்கில் இரகசியம் காக்கப்படாமல், திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.






