தமிழகம் முழுவதும் 24 அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.44.30 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தமிழகம் முழுவதும் சில அரசு அதிகாரிகள் தீபாவளிக்கு பரிசுப் பொருளும், பணமும் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
குறிப்பாக கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் சோதனை நடத்திய போது ரூ.3.50 இலட்சம் கைப்பற்றப்பட்டது. நேற்று முன் தினம் புதனன்று தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தில், பரிசு பொருட்களை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து, நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி ஜெயந்த் முரளியின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 24 அரசு அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 3 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட 24 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். திடீரென மாநிலம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதால், அரசு அதிகாரிகளிடம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
ஒவ்வொரு அலுவலகங்களிலும் கைப்பற்றபட்ட தொகை:






