பாரத பிரதமர் மோடி., கடத்த பாராளுமன்ற தேர்தலின் அறிவித்த வாக்குறுதியில் மிகவும் முக்கியமான மற்றும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதி “வெளிநாடுகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப்பணத்தை மீட்டு கொண்டுவருவேன்.
கருப்பு பணமானது இந்தியாவிற்குள் வந்தவுடன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.15 இலட்சம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். தற்போது பாரத பிரதமர் மோடி அவர்கள் பதவியேற்று 4 வருடங்கள் தாண்டியுள்ள நிலையில்., அவரின் ஆட்சிக்காலமும் நிறைவடைய போகிறது.
மேலும் ரூ.15 இலட்சமும் இருவரை யாருக்கும் வந்த பாடில்லை மற்றும் அவரின் ஆட்சிக்காலமும் முடியப்போகிறது. இதனால் ஆத்திரமடைந்த மும்பையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தங்களின் வங்கி கணக்கில் ரூ.15 இலட்சம் செலுத்தப்பட்டு உள்ளதா என்று சோதித்தனர்.
அவர்களின் வங்கி கணக்கில் தற்போது வரை ரூ.15 இலட்சம் செலுத்தப்படாததால் ஆத்திரமடைந்த அவர்கள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் தனஞ்ஜெய முண்டே தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வாக்குறுதியை நிறைவேற்றக்கூறி முழக்கங்களை இட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






