ஹோலோவின் உச்சக்கட்டம்.!! தலையில்லாமல் நடமாடும் பேய்.!! வைரலாகும் வீடியோ.!!!

ஹலோவின் தினம் என்ற பண்டிகையானது மேற்கத்திய நாடுகளில் அகால மரணம் அடைந்தவர்களின் ஆவிகளை சந்தோஷப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

இந்த பண்டிகையை கொண்டாடும் அனைவரும் திரைப்படங்களில் காட்டப்படும் பயங்கரமான தோற்றத்துடன் கூடிய பேய்கள் போலவே வேடமிட்டு இந்த பண்டிகையை கொண்டாடி வருவார்கள்.

அந்த வகையில் நேற்று அமெரிக்கா., அயர்லாந்து., பிரிட்டன் மற்றும் கனடா நாடுகளில் ஹாலோ திருவிழாவானது கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி தனது மகளுக்கு அளித்த வேடத்தினை எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிடவே தற்போது அந்த வீடியோ காட்சிகளானது வைரலாகி வருகிறது.

அந்த பெண்மணி தனது மகளுக்கு தலையில்லாத முண்டம் என்று நமது ஊர்களில் கூறப்படும் பேயின் வேடத்தை அந்த குழந்தைக்கு ஏற்பாடு செய்து சாலைகளில் நடக்க வைத்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகளானது ஹாலோ திருவிழா கொண்டாடும் நாடுகளில் வைரலாகி வருகிறது.