கருத்து வேறுபாட்டால் காதலி தன்னை விட்டு பிரிவதாக கூறியதால், ஆத்திரத்தில் காதலியின் உதட்டை கடித்து துப்பிய காதலனின் வெறிச்செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவன் ஃப்லூரி.இவர் தன்னுடன் படிக்கும் சக மாணவியான ஹேயஸ் என்ற 19 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இருவருக்குள்ளும் கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டைகள் வருவதுண்டு. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அதனை தாங்கி கொள்ளமுடியாத ஹேயஸ்,காதலன் ஃப்லூரியை விட்டு பிரியப்போவதாக அவரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரிவதற்கு முன்பு ஃப்லூரி தனது காதலியை முத்தமிட முயற்சித்துள்ளார்.
ஆனால் அதனை விரும்பாத ஹேயஸ் அவரை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஃப்லூரி,தனது காதலி என்றும் பாராமல் ஹேயஸின் உதட்டை கடித்து துப்பியுள்ளார்.
வலியால் துடித்த ஹேயஸை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் 300க்கும் மேற்பட்ட தையல்கள் போட்டு ஹேயஸின் உதட்டை ஒட்ட வைத்துள்ளனர்.
இதனையடுத்து காதலியின் உதட்டை கடித்த புகாரில் கைது செய்யப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







