இளைஞரின் வினோதமான திருமண ஆசை, மறுப்பு தெரிவித்த கோவில் நிர்வாகம்!

திருநங்கையை காதலித்து திருமணம் செய்ய நினைத்த இளைஞரின் திருமணத்தை செய்து வைக்க கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்குமார்.இவர் டிப்ளோமா படித்துள்ளார். இவர், பி.ஏ இங்கிலீஷ் படிக்கும் ஸ்ரீஜா என்ற திருநங்கையை காதலித்து வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அருண்குமார் ஸ்ரீஜாவை அவரை திருமணம் செய்ய முடிவு செய்து, கல்யாண பத்திரிக்கை அடித்துஉறவினர்கள் சிலர் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்துள்ளார்.

இவ்வாறு திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்த நிலையில் இறுதியில் ஸ்ரீஜா திருநங்கை என்பதை கோவில் நிர்வாகம் அறிந்ததால், இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

அவர்கள் எவ்வளவோ கெஞ்சியும் கோவில் நிர்வாகம் ஒத்து வராததால் திருமண ஆசையோடு வந்த இருவரம் அதிர்ச்சியுடனும், ஏமாற்றத்துடனும் திரும்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.