திடீர் பரபரப்பு! அமைச்சரின் மெய்க்காப்பாளர் தற்கொலை!

கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ டி தாமஸ். அம்மாநில போலீஸ் ஆயுதப்படையை சேர்ந்த காவலர் சுஜித் (வயது 27) கடந்த இரண்டாண்டுகளாக அமைச்சரின் மெய்க்காப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில்,கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், கடக்கல் தாலுக்காவில் உள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் இன்று காவலர் சுஜித் துப்பாக்கியால் தனது தலையில் சுட்டுக்கொண்டு பிணமாக கிடந்தார்.

இந்த தகவல் அவள் துறைக்கு தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்துவந்த காவல் துறையினர், அவரது உடலை கைப்பற்றி, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இசம்பவத்தை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீர்வளத்துறை அமைச்சரின் மெய்க்காப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.