கொழும்பில் அவசரமாக கூடும் கூட்டமைப்பின் உயர்குழு?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது. நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று காலை 10.15 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கவுள்ள முடிவுகள் குறித்து ஆராய்வதற்கே இந்த கூட்டம் இன்றுகூடுகிறது.

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு இன்று மாலை தெரிய வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.