அமெரிக்காவிற்கு புறப்பட்ட தமிழிசை.!!

அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு கலாச்சார ஒருங்கிணைப்பு சான்றோர் மையத்தின் சார்பில் சர்வதேச அளவிலான வளர்ந்து வரும் நட்சத்திரத்திற்கு விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த விருதானது தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

அந்த வகையில் அரசியல்., மருத்துவம் மற்றும் சமூகசேவைகள் போன்ற செயல்களில் சிறந்து விளங்கிய பெண்தலைவர் பிரிவில் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை பெறுவதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டார். பின்னர் புதுடெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

மேலும் அமெரிக்கா சென்றவுடன் அங்கு வழங்கப்படும் விருதை பெற்றவுடன் சிகாகோ மற்றும் வாஷிங்டன் பகுதிகளில் தமிழ்ச்சங்கங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றப்போகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விருதினை பெற்ற பின்னர் அங்கு உள்ள தமிழ்ச்சங்கங்களின் அழைப்பை ஏற்று., நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் நவம்பர் 3 ம் தேதி இந்தியாவிற்கு திரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.