அரிஸோனா அமெரிக்கா:
54 வயதான ஒரு அப்பா தனது மகளின் நண்பியை (27) திருமணம் செய்து கொண்டார்…இதுதான் கதை… ஆனால், முன்னர் வந்தது சற்று தவறான செய்தி….
அமெரிக்காவை சேர்ந்த நெருங்கிய தோழிகள் டெய்லர் – அமண்டா. ஒரே இடத்தில்தான் வேலை பார்க்கிறார்கள். அமண்டாவின் தந்தை லெய்மன் டெய்லருக்கு அறிமுகமானார். தந்தை வயது 54, டெய்லர் வயது 27. சரியாக பாதிக்கு பாதி வயது குறைவு.யாரும் ஏற்கவில்லை.
வெறும் அறிமுகமானது நட்பானது… நட்பு காதலானது… காதல் எதிர்ப்பை தர தொடங்கியது. இருவரின் காதலும் இரு வீட்டுக்கும் தெரிய வர, இரண்டு வீட்டிலும் ரணகளம்தான்!!
யாருமே இதற்கு ஒத்து கொள்ளவில்லை.பச்சைக்கொடி ஆனால், அமண்டா மட்டும் தடுமாறினாள். அப்பாவும் வேணும், தோழியும் வேணும்… இரண்டு பேரையுமே விட்டு தர முடியவில்லை. ஆனால் காதல் ஜோடி பிடிவாதமாகவே இருந்தார்கள்.கடைசியில் அமாண்டா காதலர்களுக்கு பச்சை கொடி காட்டி விட்டார்!
பிறகு மகளே அப்பாவுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.
இது பற்றி டெய்லர் சொல்லும்போது ‘என்னவோ தெரியவில்லை முதல் முதலா பார்த்த போது என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சார். வயது வித்தியாசம் எல்லாம் என் கண்ணுக்கு தெரியவே இல்லை. எனக்கு யாரை பத்தியும் கவலை கிடையாது, யார் என்ன சொன்னாலும் காதிலும் போட்டு கொள்ள மாட்டேன். என் தோழி அமண்டா என்னை புரிஞ்சிக்கிட்டாள். எனக்கு அதுவே போதும்.
என்ன ஒன்னு, எங்களை பார்க்கறவங்க எல்லாரும் அப்பா – பொண்ணு-ன்னு நினைச்சுக்குறாங்க. அதான்… எனக்கு கவலையே இல்லை என்கிறார்.
அதேபோல புதுமாப்பிள்ளை லெய்மன் சொல்லும்போது, டெய்லர் எனக்கு மனைவியில்லை, பெஸ்ட் ஃபிரண்ட். என் மகள் எங்களை ஏற்று கொண்டதே போதும், எங்களுக்கு யாரை பத்தியும் கவலை இல்லை’ என்றார். ‘இதையேதான் அந்த டெய்லரும் சொன்னாரு..
27 வயசு இளம் பெண்ணை 54 வயது நபர் கல்யாணம் பண்ணிக்கிட்ட சம்பவத்துக்கு பிறகு நிறைய அமெரிக்க இளைஞர்களின் காதில் புகை வந்து கொண்டிருக்கிறது!!