போலி அழகுசதான பொருட்களை விற்பதாக புகார்.! ரைடு மேற்கொண்டதற்கு விளக்கம் கேட்டு., கெடு வைக்கும் நிறுவனம்.!!

தற்போதுள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும்., கடைகளுக்கு சென்று வாங்குவதை தவிர்த்துவிட்டு வீட்டிலிருத்தபடியே அனைத்தையும் இணையதள வழி பரிவர்த்தனை மூலமாக பெறுகின்றனர்.

அந்த வகையில் பெறப்படும் பொருட்களில் போலியான பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த போலி பொருட்களுக்கு எதிராக அதிகாரிகளுக்கு எழுந்த புகாரை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில்., கலப்படம் செய்யப்பட்ட அங்கீகாரம் செய்யப்படாத அழகுசதான பொருட்களை இணையதளத்தின் வழியாக விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த அழகு சாதன பொருட்கள் அனைத்தும்., வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்ற செய்தியும் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த விசயத்திற்கு தீர்வு காணும் வகையில்., கடும் அபராதம் விதிக்கப்படப்போவதாகவும் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இணையதளத்தில் விற்பனை மேற்கொள்ளும் அமேசான் போன்ற பல நிறுவனங்கள் இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு விளக்கம்கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சம்மனுக்கு தகுந்த பதிலை இன்னும் 10 நாட்களுக்குள் வழங்கவில்லை என்றால்., தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையதளத்தின் வழியாக வந்த இந்த நிறுவங்கள்., அங்கு மேற்கொண்ட ஆய்விற்கு இது போன்ற எதிர்ப்பை தெரிவித்தது தற்போது பெரும் பிரச்சனைக்குள்ளாகிறது.