சென்னையில் உள்ள மதுரவாயல் கங்காநகரை சார்ந்தவர் நாகூர் கனி. இவருடைய வயது 44. இவர் வீட்டுமனைகளை விற்பனை செய்யும் தொழில் மேற்கொண்டு வந்தார். இவரது மனைவியின் பெயர் சோபிதாபேகம். இவர்கள் இருவருக்கும் மகனும்., மகளும் உள்ளனர்.
சோபிதாபேகம் தனது உறவினரின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக தனது குழந்தைகளுடன் செல்லவே., வீட்டில் இவரின் கணவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். உறவினர் வீட்டிற்கு சென்ற மனைவி., மீண்டும் இல்லத்திற்கு திரும்பிய போது வீடு திறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
இதனைக்கண்ட அவர் தனது கணவரை தேடியபோது அவர் தனது அறையின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்குவதை கண்ட சோபிதாபேகம் கூச்சலிட்டு கதரத்தொடங்கினர்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் பதறியபடி அவர்களின் இல்லத்திற்கு வந்து தூக்கில் பிணமாக தொங்கிய கனியை கண்டு அதிர்ச்சியடையவே., இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., ரியல் எஸ்டேட் தொழில் தற்போது கடும் வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில் வருமானம் கிடைக்காமல்., குடும்பத்தை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடும் மனஉளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் இந்த தற்கொலை சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற பார்வையிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






