இந்திய எல்லையில் வீரமரணமடைந்த இந்திய இராணுவ வீரருக்கு, உயிர் பிரிந்த அதே நேரத்தில் அவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. திரைப்படங்களில் அமைக்கப்படும் கட்சி போலவே ஒரு உயி பிரியும் பொது ஒரு பிறந்துள்ளது.
நாம் இங்கு அமைதியான சூழ்நிலையில் இருக்க, நம் இந்திய எல்லையில் தங்களது குடும்பங்களை விட்டுவிட்டு, மொத்த இந்திய மக்களையும் காக்கும் ஒரே குறிக்கோளோடு நம் இந்திய இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீரின் இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாயக் ரஞ்சித் சிங் உள்ளிட்ட 4 இந்திய வீரர்கள் மீது, பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் பலியாகினர்.
இந்த தாக்குதலில் இந்திய வீரர் ரஞ்சித் சிங் வீரமரணமடையும் முன் அவரது மனைவி ஷிமு தேவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஓரிரு நாட்களில் நமக்கு வாரிசு பிறந்துவிடும். கையில் தூக்கி கொஞ்ச காத்திருந்த ரஞ்சித் சிங்கிற்கு வீரமரணமே கிடைத்தது.
வீரமரணமடைந்த ரஞ்சித் சிங்கின் உடல் முழு இந்திய ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட, அதே நேரத்தில் அவரின் மனைவி ஷிமு தேவி அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மகளை காணாமலே வீரமரணமடைந்த தந்தையின் ஊர்வலம் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தது.
செய்தியறிந்த அவரின் மனைவி கண்ணீருடன், தனது கணவரை கடைசியாக ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்று ஆம்புலன்ஸ் மூலம் தனது பச்சிளம் குழந்தையுடன் பறந்து வருகிறார். வந்து இறங்கிய பின் அங்கிருந்தவர்கள் கண்ணீர் ஆறாக ஓடியது என்றுதான் சொல்லவேண்டும்.
ரஞ்சித் சிங்கின் உயிரற்ற உடலை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுகிறார் அவரின் மனைவி, பின் நாட்டிற்காக வீரமரணமடைந்த ரஞ்சித் சிங்கின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.






