யார் புள்ளைக்கு யாரு அப்பன்!! அலறி அடித்து கொண்டு காவல் நிலையம் ஓடிய மாப்பிள்ளை!

திருமணம் முடிந்து 15 நாளில் மனைவிக்கு குழந்தை பிறந்தாய் கேட்ட புது மாப்பிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளிக்க அலறி அடித்து கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை உண்டாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வசித்து வரும் அஜிஸ் என்பவருக்கும், தருமபுரியை சேர்ந்த பர்வீன் பானு என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடனும், பின்னணி சம்மதத்துடனும் நடந்துள்ளது. ஆனால், திருமணம் முடிந்து நாள் முதல் பர்வீன் பானுவின் முகத்தில் சந்தோஷ கலையே இல்லை.

மேலும் அடிக்கடி வயிற்று வலி என கூறி வந்திருக்கிறார். அதோடு இல்லாமல் வீட்டில் வீட்டில் யாருடனும் பேசாமலேயே இருந்துள்ளார். மாப்பிளை வீட்டிலும் கொஞ்ச நாள் ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்று இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (22.10.2018) இரவு பர்வீன் பானுக்கு வயிற்று வலி கடுமையாகியுள்ளது. உடனே அவரின் கணவர் அழைத்து கொண்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

புது மாப்பிள்ளையான அஜிஸ்க்கு பதட்டமான சூழ்நிலையில் நின்று கொண்டிருக்க, பர்வீன் பானுவை மருத்துவர்கள், அவருக்கு இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் கூறியதை கேட்ட புது மாப்பிளை அஜீஸ்க்கு தலையில் குண்டை தொக்கி போட்டது போல் இருந்துள்ளது. அடுத்த நொடி அலறி அடித்து கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே தலைதெறிக்க ஓடினார் அஜீஸ்.

இதற்கிடையே மருத்துவர்கள் சொன்னது போலவே பர்வீனுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின் மருத்துவமனை நிர்வாகம் பிறப்பு பதிவு சான்றிதழை தயார் செய்ய முனைந்தனர்.

தந்தையின் பெயரை போடுவதற்காக, புது மாப்பிளையை மருத்துவமனை முழுக்க தேடி உள்ளனர். ஆனால் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க ஒட்டியதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்து 15 நாளில் எப்படி குழந்தை பிறந்தது. என் புது மாப்பிளை காவல் நிலையம் சென்றார் என்று மருத்துவர்கள் குழம்பி பொய் உள்ளனர்.